×

நாட்டையே உலுக்கிய பலாத்கார சம்பவம் : பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் :பிரியங்கா காந்தி பாய்ச்சல்!!

லக்னோ : பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேசம்தான் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய பலாத்கார சம்பவம்

செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியில்  இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் புல் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண் ஒருவரால் தாக்கப்பட்டு தனது  துப்பட்டாவால் வயல்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, அதை கிராமத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள் அந்த பெண்ணை சித்திரவதை செய்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த பெண் காணவில்லை என்பதை உணர்ந்த அவள் தாய் அவளைத் தேடிச் சென்றார். மயக்க நிலையில் அப்பெண் காணப்பட்டபோது, பாம்பு கடித்ததாக கருதப்பட்டது.

ஆனால், அந்தப் பெண் பல எலும்பு முறிவுகளுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள், அவளது நாக்கு கொடூரமான தாக்குதலில் வெட்டப்பட்டது. அவளுடைய நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவள் கழுத்தில் மூன்று எலும்புகள்  உடைந்துள்ளது. அவளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. தொடர்ந்து, அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  காவல்துறை அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசம் சப்தர்ஜங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 நேற்று வரை உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் ஐ.சி.யுவில் இருந்த பெண் 2 வாரங்களுக்கு பின் இன்று டெல்லிக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பெண்ணை பலாத்காரம் செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்தப் பெண் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர், தாக்குதல் நடத்தியவர்கள் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். சமீபத்திய மாதங்களில் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடத்துவரும் நிலையில், இந்த சம்பவம், பெண்ணின் காயங்கள் குறித்த விவரங்கள் வெளிவந்ததால் நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா காந்தி ட்வீட்

இதனைக் கண்டித்த பிரியங்கா காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “அரக்கத்தனமான கொடூர நடத்தையினால் தலித் பெண் சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்து போய்விட்டார்.2 வாரங்களாக இந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடி வந்தார்.ஹத்ரஸ், ஷாஜஹான்பூர், கோரக்பூர் என்று மாறி மாறி பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவுக்கு சீரழிந்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தின் சுவடு கூட இந்த மாநிலத்தில் இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து வருகின்றனர்.இந்தப் படுபாதகத்தைச் செய்தவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பெண்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு” என்று ட்வீட் செய்துள்ளார்.

Tags : Uttar Pradesh ,Priyanka Gandhi ,women , Rape, Women, Uttar Pradesh, Priyanka Gandhi, Leap
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால்...