அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் வீட்டிற்குள் புகுந்த பலரை சரமாரியாக சுட்டுக் கொன்ற மர்ம நபர்: மக்களிடையே பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்த பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் சேலம் நகரத்தில் உள்ள வீட்டிலே திங்களன்று மதியம் 12:30 மணிக்கு  ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் பணயக்கைதிகளாக பலரை பிடித்து வைத்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பயிற்சி பெற்ற பேச்சுவார்த்தையாளரை வைத்து சந்தேக நபருடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதனால் கடுப்பான மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் போலீஸ் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்று கூறினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரிகான் மாநில காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், சம்பந்தப்பட்ட எந்தவொரு அதிகாரிகளும் விசாரணையின் போது நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>