வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் 3500 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, சமூக இடைவெளியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததாக கூறி அப்பகுதி விஏஓக்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் ஒன்றிய, பகுதி செயலாளர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் மீது அனுமதியின்றி கூடியதாகவும், தொற்று நோய் பரவும் வகையில் கூடியதாகவும் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: