பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு: ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு.!!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம்தேதி முதல் வரும் 30ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (30ம்  தேதி) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம்  அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 184 பரிசோதனை மையங்கள்  உள்ளன. கொரோனா தொற்று பரவல் தொடர்பாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது முடக்கம் கவனமுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல்  முகாம்கள் சிறப்பாக நடத்தப்படடு வருகின்றன. தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகி உள்ளது.

வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மருத்துவத்திற்காக ரூ.1,983 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப்பணிகளுக்கு ரூ.7,800 கோடி  செலவழிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவக் குழுவுடனான ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என  தெரிவித்தார். இந்தியாவிலேயே முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. குடிமராமத்து திட்டத்தால் 4,12,000 ஏக்கரில் குறுவைசாகுபடி நடைபெறுகிறது. தேவையான இடுபொருட்கள்  கையிருப்பு உள்ளது.

Related Stories: