அதிமுக செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

சென்னை : அதிமுக செயற்குழுவில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடைபெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜ் 129வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், பெஞ்சமின், சரோஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான கருத்து விவாதம் தான் நடைபெற்றது.அதிமுக செயற்குழுவால் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என எதிர்பார்த்து ஏமாந்துள்ளன.அதிமுக செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதற்காகவே வேளாண் சட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன, என்றார். முன்னதாக பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அப்போது அதிமுகவுக்கு துரோகம் செய்தது நீங்கள்தான் என நேரடியாகவே முதல்வர் குற்றம்சாட்டியதால் பரபரப்பு நிலவியது. இதனால் 5 மணி நேரம் நடந்த கூட்டத்தில் முதல்வர் விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: