தங்கம் விலை தடாலடியாக உயர்வு.. பவுனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,518க்கு விற்பனை...சுப நிகழ்ச்சி நடத்துவோர் சோகம்!!

சென்னை : தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.இந்தநிலையில் இன்று தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 உயர்ந்து ரூ.4816 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,518க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலை 2 ருபாய் 10 பைசா உயர்ந்து 63.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Stories: