×

கோவிட் ஹெல்மெட்!

நன்றி குங்குமம்

பிபிஇ கிட், மாஸ்க், சானிடைசர், கிளவுஸ், சமூக இடைவெளி, லாக்டவுன் வரிசையில் கொரோனாவைத் தடுப்பதற்காக வந்திருக்கிறது கோவிட் ஹெல்மேட். வியட்நாமைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சேர்ந்து இந்த ஹெல்மெட்டை வீட்டிலிருந்தே வடிவமைத்திருக்கின்றனர். அந்த மூன்று பேரில் 14 வயதே ஆன டிரான் என்ற மாணவர் கனடாவில் நடந்த சிறந்த கண்டுபிடிப்பு டிசைனுக்கான போட்டியில் பங்கேற்று விருதைத் தட்டியவர். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஹெல்மெட் ரொம்பவே ஸ்பெஷலானது.

இதில் ஒரு கிளவுஸ் பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட நேரம் ஹெல்மெட்டை அணிவதால் உருவாகும் வியர்வையை ஹெல்மெட்டை கழற்றாமல் அந்த கிளவுஸ் வழியாகவே துடைத்துக் கொள்ளலாம். ஏதோ ஒன்றை இறுக்கமாக அணிந்திருக்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அத்துடன் கொரோனாவும் நம்மை அண்டாது. சுவாசிக்கவும் ஏதுவான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெல்மெட்டை வடிவமைக்க சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. மாணவர்களின் முயற்சியைப் பார்த்து பெரு நிறுவனம் ஒன்று பொருளாதார ரீதியாக கைகோர்க்க முன்வந்துள்ளது ஹைலைட்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : Covit Helmet!
× RELATED ஆபாசப் படங்களை எப்படி புரிந்து கொள்வது?