×

இந்தியாவில் 61 லட்சம் பேர் பாதிப்பு... 96 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி... குணமடைந்தோர் விகிதம் 83.01% ஆக உயர்வு!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 95 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக  70,589 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61,45,292 ஆக உயர்ந்தது.
* புதிதாக 776  பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 96,318 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில்  84,877 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 51,01,398 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,47,576 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 83.01% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.57% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 15.42% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,42,811 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 7,31,10,041 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
    
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :265455; குணமடைந்தோர் : 1049947; இறப்பு :  35751

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46306; குணமடைந்தோர் :  530708 ; இறப்பு :  9383
    
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 27123 ; குணமடைந்தோர் :  240703 ; இறப்பு :  5272

கேரளா : சிகிச்சை பெறுவோர் :57957 ; குணமடைந்தோர் :  121268 ; இறப்பு :  697

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 104067; குணமடைந்தோர் :469750 ; இறப்பு :  8641
    
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :63116; குணமடைந்தோர் :  612300 ; இறப்பு : 5745

Tags : India ,recovery , India, Corona, Number, Rise
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...