×

தமிழக அரசுக்கு, மத்திய அரசு ரூ.23,763.36 கோடி நிலுவை தொகை தர வேண்டும்: அதிமுக செயற்குழுவில் பட்டியல் போட்டு அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழக அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜிஎஸ்டி நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். அதன்படி,
* ஜிஎஸ்டி வரியினை செயல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டு தொகையாக, ரூ.12,258.94 கோடி
* ஜிஎஸ்டி-யில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிலுவை தொகையாக ரூ.4,073.00 கோடி
* அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் ரூ.1,092.22 கோடி
* அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ரூ.2,109.08 கோடி
* வெள்ள மேலாண்மை திட்டத்தில் ரூ.342.94 கோடி
* குடும்ப நல திட்டத்தில் ரூ.68.88 கோடி
* இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட திட்டத்தில் ரூ.178.35 கோடி
* மீன்பிடி துறைமுகங்கள் கட்டுதல் திட்டத்தில் ரூ.9.25 கோடி
* பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர்வரத்து மேலாண்மை திட்டத்தில் ரூ.81.13 கோடி
* 2014-2015ம் ஆண்டு திட்டத்திற்கான கூடுதல் மத்திய நிதி உதவியாக ரூ.76 கோடி
* 2015ம் ஆண்டு வெள்ளத்திற்காக பேரிடர் நிவாரண நிதியாக ரூ.66.90 கோடி
* தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விற்பனை ஊக்குவிப்பு தொகை ரூ.53.79 கோடி
* மீனவர்களுக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.123.84 கோடி
* நீர் அமைப்புகளை பழுதுபார்த்து, புதுப்பித்து சீரமைத்தல் திட்டத்தில் ரூ.25.90 கோடி
* பழங்குடியின மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்பிற்கு பிந்தைய படிப்பு உதவித் தொகை ரூ.18.50 கோடி
* திட்டங்கள் சார்ந்த நிலுவை தொகையாக மொத்தம் ரூ.16,505.32 கோடி
* 13வது நிதி குழுவின் நிலுவை மானியங்கள் ரூ.522.91 கோடி
* 14வது நிதி குழுவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகை ரூ.2,577.98 கோடி
* மாநில பேரிடர் பொறுப்பு நிதி ரூ.84.15 கோடி என மொத்தம் ரூ.3,185.04 கோடி
* ஆக மொத்தம் ஜிஎஸ்டி வகையில் ரூ.4,073.00 கோடியும், திட்டங்கள் சார்ந்து அளிக்கப்பட வேண்டிய நிலுவை தொகை வகையில் ரூ.16,505.32 கோடியும், மானியங்கள் வகையில் ரூ.3,185.04 கோடி என மொத்தம் ரூ.23,763.36 கோடி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருந்து தமிழகத்திற்கு தரப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Central Government ,AIADMK Executive Committee , Govt to pay Rs 23,763.36 crore to Tamil Nadu: AIADMK
× RELATED புதிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழக...