×

லிப்ட் அறுந்து விழுந்து கர்ப்பிணி உட்பட 5 பெண்கள் காயம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த பொங்கலூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான சிந்து(21) என்பவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, அதில் சில பெண்கள் திருமண மண்டபத்தின் மாடிக்கு செல்வதற்காக சிந்துவை அழைத்து செல்ல லிப்டில் ஏறினர். அப்போது, அவர்களது பாரம் தாங்காமல் லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது. இதில், சிந்து, அமுதம்(48), மீஞ்சூர் பகுதியை சேர்ந்த காவேரி(42), பொன்னேரி பகுதியை சேர்ந்த மங்கலம்(38), எண்ணூரை சேர்ந்த  ரங்கபாஷ்யம், மீஞ்சூரை சேர்ந்த ராஜவேணி(34) ஆகிய 5 பெண்கள் காயமடைந்தனர். இதனை கண்ட உறவினர்கள் காயமடைந்த பெண்களை மீட்டு மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து, புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Five women were injured, including a pregnant woman, who fell off a lift
× RELATED விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்