2 பெண்கள் தற்கொலை

ஆவடி: திருமுல்லைவாயல் விஜயலட்சுமி நகர் 1வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ஸ்ரீதனபிரியா(53). இவர்களுக்கு பவித்ரா(16) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீதனபிரியா படுக்கையறையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரதாப். ஐடி நிறுவனத்தில் கார் டிரைவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி(28). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், ஊரடங்கால் பிரதாப்புக்கு வேலையில்லை. இதனால், கடந்த சில தினங்களாக கிருஷ்ணவேணி மனமுடைந்த நிலையில் இருந்ததால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

Related Stories:

>