மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி பூந்தமல்லி ஒன்றியம், வெள்ளவேட்டில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் பூவை பீ.ஜேம்ஸ் தலைமையில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.தேசிங்கு முன்னிலையில் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி கண்டன உரையாற்றினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில், திமுக நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலையில் கா.மு.தயாநிதி, பொன்.பாண்டியன், தி.ஆ.கமலக்கண்ணன், எஸ்.கே.ஆதாம், டி.கே.பாபு, காங்கிரஸ் சி.பி.மோகன்தாஸ், அருள்மொழி, ஜெ.கே.வெங்கடேசன், வி.இ.ஜான், ஒய்.அஸ்வின்குமார், சிபிஐ  கஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பூந்தமல்லி ஒன்றியம் நசரத்பேட்டையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார் முன்னிலையில், காங்கிரஸ் சேகர், விசிக கௌதமன், முனியன், கருணாகரன், மதிமுக மணி, கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், ஊராட்சி தலைவர் திவ்யா பொன்முருகன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி நகரம் குமணன்சாவடியில் மதிமுக மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் தலைமையில், நகர திமுக செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் வரவேற்புரையில், முன்னாள் எம்எல்ஏ அருள்அன்பரசு, வக்கீல் இ.பரந்தாமன்,  காயத்ரி ஸ்ரீதரன், அன்பழகன் ஆகியோரும், திருவேற்காட்டில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அஸ்காப் தலைமையில், நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் முன்னிலையில், ஏ,ஜெ.பவுல், குமாரசாமி, சாது, கிருஷ்ணகுமார், சத்தியகிரி, காந்தி, ராஜி, பரிசமுத்து, சுதாகர், கண்ணன், இளங்கோவன் காங்கிரஸ் லயன் டி.ரமேஷ்,  தீனதயாளன், விசிகா மணிமாறன்,  மதிமுக பார்த்திபன், கம்யூனிஸ்டு மனோகரன், ராஜா ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.

ஆவடி: ஆவடி மாநகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று  நடைபெற்றது. இதில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு நாசர் தலைமை தாங்கினார். திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், தமுமுக சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பூவை ஜெரால்டு, ருக்கு, பவன்குமார், யுவராஜ், ராஜசேகர், சூரியகுமார், ஆதவன், மயில்வாகனன், ராமகிருஷ்ணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், பேரூர் செயலாளர் அறிவழகன், மகிளா காங்கிரஸ்  மாநில தலைவி சுதா, மாவட்ட தலைவர் சிதம்பரம், கம்யூனிஸ்ட்  கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசி நாராயணன், ஒன்றிய செயலாளர் எளாவூர் அருள், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் நேசகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், ஜனப்பசத்திரம் கூட்டு சாலையில் சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்துறை மசோதாவை எதிர்த்து 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றிய திமுக சார்பில் நசரத்பேட்டையில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீஞ்சூர் பஜார் வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுப்பிரமணி, பாஸ்கர் சுந்தரம், மீஞ்சூர் மோகன்ராஜ், ஒன்றிய குழுத்தலைவர் ஜி.ரவி, யுகேந்தர், துரைகண்ணு, கோபி கிருஷ்ணன், ஜலந்தர், உமாபதி, சந்திரசேகர், சிவராஜ், விஜயன், விநாயகமூர்த்தி, கதிர்வேல், எரமேஷ்குமார், பாலன், ஆனந்த், ரா.நடராஜன், மீராசா, உசேன் அலி, ஒன்றிய நிர்வாகிகள் கா.சு.தன்சிங், பா.து.தமிழரசன், ஆ.ராஜா, ஆ.பாளையம், அ.முனுசாமி, கஸ்தூரி தசரதன், ச.ரவிசந்திரன், சக்திவேல், ப.தமிழரசன், பொன்.கு.லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் வீ.மூர்த்தி, கம்யூ.செல்வராஜ், மதிமுக ஜெயக்குமார், விசிக அறிவழகன், திக. அருணகிரி, முஸ்லீம் லீக் அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை பேருந்து நிலையத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக  துணை செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட பொருளாளர் கே.சத்தியராஜ், ஒன்றிய பொருளாளர் வி.ஜி.மோகன், மாநில விவசாய அணி தலைவர் ஜி.எஸ்.சுந்தரவேலு, பா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர்  கலந்துக்கொண்டனர்.

புழல்: சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், மொண்டியம்மன் நகர் மார்க்கெட் அருகே ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>