×

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

கூடுவாஞ்சேரி: ஏசிடிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நல்லம்பாக்கம் ஊராட்சியில் இயங்கும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் தொடக்க விழா கண்டிகையில் இருந்து வேங்கடமங்கலம் செல்லும் சாலையி நடந்தது. தொண்டு நிறுவன இயக்குநர் தேவன்பு தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் கிறிஸ்டி, புவனேஸ்வரி, மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், ஊனைமாஞ்சேரி, நெடுங்குன்றம், காரணைப்புதுச்சேரி, குமிழி உள்பட பல்வேறு ஊராட்சிகளில், இந்த வாகனம் மூலம் சுகாதார துறையினர், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Corona Awareness Campaign , Corona Awareness Campaign
× RELATED கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனம்