×

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (34). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (28). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, 6 மாதங்களாக ரகமதுல்லா வேலை இல்லாமல் இருந்தார். இதனால், குடும்பத்தில் வறுமை வாட்டியது. இதையொட்டி கவணன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மீண்டும் அவர்களுக்கு சண்டை ஏற்பட்டது. இதையடுத்து ரகமதுல்லா வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கார்த்திகா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து பீர்க்கன்காரணை  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Teen ,suicide , Teen commits suicide by hanging in family dispute
× RELATED கரூரில் குடும்ப தகராறால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தற்கொலை !