காஞ்சிபுரம், செங்கல்பட்டு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சியினர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மத்திய பாஜ அரசின்  விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகர எல்லையான பொன்னேரிக்கரையில் காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கீழம்பி களத்துமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ வரவேற்றறார். மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு பகுதியில் மேடை அமைக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் நகரம், சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி உள்ளிட்ட காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டன. காஞ்சிபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டன. வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ஸ்ரீதரன், கே.எஸ்.ராமச்சந்திரன், கண்ணன், தம்பு, சத்தியசாய், சரவணன், ஏழுமலை, காஞ்சி வடக்கு ஒன்றிய பொருளாளர் தசரதன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், சேகர், தொமுச பேரவை சுந்தரவதனம், இளங்கோவன், காஞ்சிபுரம் நகர அவை தலைவர் சந்துரு, துணை செயலாளர் கருணாநிதி, பொருளாளர் வெங்கடேசன், கீழம்பி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் செவிலிமேடு மோகன், நாத்திகம் நாகராஜன், கமலக்கண்ணன், அன்பில் பொன்னா(எ)வெங்கடேசன், கந்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர  திமுக நகர செயலாளர் எஸ். நரேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், மதிமுக ராமலிங்கம், காங்ரஸ் நகர தலைவர் ஜெ.பாஸ்கர், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பிரமிளா, விசிக நகர தலைவர் ரவீந்திரன், மமக நிர்வாகி யூனூஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டசெயலாளர் செல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மமக மாநில பொது செயலாளர் ப.அப்துல்சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இரா. தமிழரசன் ஆகியோர்  கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினர். இதில், திமுக நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம், ராஜி, சந்தோஷ்கண்ணன், சந்தியா உள்பட கூட்டணியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் தெற்கு, வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் நடந்தது. காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், இளைஞரணி அமைப்பாளர்கள் குண்ணம் ராமமூர்த்தி, சோகண்டி பாலா, துணை அமைப்பாளர் சந்தவேலூர் சத்யா, காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கநாதன், கணபதி, முருகேசன், நிக்கோலஸ், மதிமுக துரை பாலாஜி, சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே எம்எல்ஏ இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செழியன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், பழனி, அஜய்மோகன், மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முடிவில் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகே மாமல்லபுரம் திமுக நகர செயலாளர் வெ.விசுவநாதன் தலைமையில் சிபிஎம்நகர செயலாளர் முரளி, தமுமுக நகர செயலாளர் பீர் முகமது, திமுக இளைஞரணி நகர செயலாளர் மோகன் குமார், காங்கிரஸ் புனிதவேல், மதிமுக நகர செயலாளர் பாபு,  திராவிட கழகம் மாவட்ட தலைவர் சுந்தரம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர் திமுக சார்பில் பஸ் நிலையம் அருகில் பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமையிலும், வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் தேவராஜ், மதிமுக பேரூர் செயலாளர் ரவிராஜன், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி, ஒன்றிய தலைவர் பாலு, மதிமுக ஒன்றிய செயலாளர் பாரத் ராஜேந்திரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், நிர்வாகிகள் ராமமூர்த்தி, அப்துல்காதர், பத்மநாபன், டில்லி, சதீஷ்குமார், கோகுலநாதன், தரணி, மதிவாணன், ஜான்சிராணி  உள்பட கூட்டணி கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யூர்: சரவம்பாக்கம் பஜார் பகுதியில் எம்எல்ஏ புகழேந்தி, ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட பிரதிநிதி கிணார் அரசு, ஒன்றிய துணை செயலாளர் தணிகையரசு, நிர்வாகிகள் சசிக்குமார், ராமகிருஷ்ணன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  சித்தாமூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமையிலும், இடைக்கழிநாடு பேரூராட்சியில் பேரூர் செயலாளர் இனி அரசு தலைமையிலும், செய்யூரில் லத்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்எல்ஏ ஆர்.டி.அரசு உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக  செயலாளர் வீ.தமிழ்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலையிலும், கல்பாக்கம் அடுத்த நெரும்பூரில் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எடையாத்தூர் சரவணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுராந்தகம்: மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் சத்யசாய், எம்எல்ஏ புகழேந்தி, காஞ்சி தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் ராஜா, முகிலன், எழிலரசு, யோகானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் நகர செயலாளர் குமார் தலைமையில், ஏறு பூட்டியபடி  விவசாயிகள்  வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருங்குழி பேருராட்சியில் பேரூர் செயலாளர் விஜயகணபதி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பேரூர் செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் கோகுல கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசு, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

* இந்தியாவுக்கே வழிகாட்டும் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்று பேசியதாவது:

பொதுமக்களை, விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு பிரச்னையானாலும், தென்னிந்தியாவிலேயே முதல் குரல் கொடுப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இந்தியாவின் 3 வது பெரிய கட்சியான திமுக பொதுமக்களை காக்க, பிரச்னைகளுக்கு தீர்வுகாண எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு காஞ்சிபுரம் வந்து சென்றபிறகு, நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாவின் ஆசியோடு திமுக மகத்தான வெற்றி பெற்றது. அதேபோல் இன்னும் ஆறேழு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்காஞ்சிபுரத்துக்கு விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு வந்துள்ளார்.

எனவே, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் காஞ்சி மண்ணின் மைந்தன் அண்ணாவின் ஆசியோடு திமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.

Related Stories: