×

போதை பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் சப்ளை விவகாரத்தில் நடிகை ராகிணியும், சஞ்சனாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிதிபர் ராகுல் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் போதை பொருள் வழக்கில் இன்னும் பலரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால், குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என்ற சிசிபி போலீஸ் தரப்பில் வைத்துள்ள வாதம் நியாயமாக இருப்பதால், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார். இதனிடையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து விரைவில் இரு நடிகைகளும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கொரோனா தனிமை சிறையில் இருக்கும் இருவரையும் சாமானிய கைதிகள் உள்ள சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

Tags : Actresses ,Ragini ,Sanjana , Actresses Ragini and Sanjana's bail plea dismissed in drug case
× RELATED நடிகைகளை கிண்டலடிப்பதா? நடிகர் சங்கத்துக்கு ரேவதி, பத்மப்பிரியா கேள்வி