ஐஎஸ்எல் தொடரில் ஈஸ்ட் பெங்கால்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் புதிய அணியாக, நாட்டின் பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்றான ஈஸ்ட் பெங்கால் எப்சி இணைந்துள்ளது. இந்தியன் சூப்பர் லீக் தொடர்களில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் 11வது அணியாக ஈஸ்ட் பெங்கால் எப்சி அணி இணைந்துள்ளதாக ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈஸ்ட் பெங்கால் எப்சி  1920ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தாவை சேர்ந்த இந்த அணி தேசிய கால்பந்து லீக் கோப்பையை 3 முறையும், பெடரேஷன் கோப்பையை 8 முறையும், சூப்பர் கோப்பையை 3 முறையும், துரந்தோ கோப்பையை 16 முறையும், ஐஎப்ஏ கேடயத்தை 29 முறையும், கொல்கத்தா கால்பந்து லீக் கோப்பையை 39 முறையும் வென்று சாதனை படைத்துள்ளது. பெங்கால் அணியின் பரம எதிரியாக கருதப்படும் 130 ஆண்டுகள் பழமையான ‘மோகன் பகான்’ அணி கடந்த ஆண்டு ஐஎஸ்எல் அணியான ஏடீகேயுடன் இணைந்து விட்டது. அதனால் அந்த அணி இப்போது ஏடீகே மோகன் பகான் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஈஸ்ட் பெங்கால் எப்சியும் புதிதாக இந்த ஆண்டு முதல் ஐஎஸ்எல் தொடரில் விளையாட உள்ளது.

Related Stories: