தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தொடர்ந்து பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, விஜயகாந்த் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது.

அதைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன், மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர். அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரேமலதா தான் தலைமையேற்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>