உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் வகுப்புக்கு தடைகோரி புதிய மனு

புதுடெல்லி: ‘பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர் கிஷோர் கார்க் என்பவர் சார்பில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில்,” கொரோனா காரணமாக நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இணைய தளத்தில் இயங்கும் இந்த புதிய கல்வி முறையில் பல ஆபத்துகள் நிறைந்துள்ளது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் ஆபாச வலைதளம் போன்றவற்றை சுலபமாக பயன்படுத்திவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதனால் இதுகுறித்து ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் வரை ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>