×

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு தொற்று சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,283 பேருக்கு பாசிட்டிவ்

அண்டை மாவட்டங்களில் குறையவில்லை

சென்னை: சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு என்ற நிலையை அடையவில்லை. அதேபோல சென்னையிலும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி தொற்று ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 1,280, நேற்று 1,283 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒரே நிலையே நீடிக்கிறது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நேற்று மட்டும் 80,465 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,589 பேருக்கு தொற்று உறுதியானது.  இதில் சென்னையில் 1,283 பேர், செங்கல்பட்டில் 249 பேர், திருவள்ளூரில் 249 பேர், காஞ்சிபுரத்தில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவிலான பாதிப்பு தற்போது 5 லட்சத்து 86,397 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து 53 ,858 ஆண்கள், 2 லட்சத்து 32,508 பேர் பெண்கள், 31 திருநங்கைகள் அடங்குவர். நேற்று 5,554 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த குணமடைந்ேதார் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் ஆக உயர்ந்துள்ளது. 46,306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 70 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 13 பேர், கோவையில் 6 பேர், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் தலா 5 பேர், நாமக்கல், திருப்பத்தூரில் தலா 4 பேர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், தென்காசி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நீலகிரி, ராணிப்பேட்ைட, திருவாரூர். நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 70 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். 64 பேர் கொரோனா மற்றும் இணை நோய் காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது
மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8 வரையிலான) புதிதாக 82,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 60 லட்சத்து 74,702ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் வைரஸ் தொற்றில் இருந்து 50 லட்சத்து 16,520 பேர் குணமடைந்துள்ளனர். 9,62,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82.58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1039 பேர் நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 95,542பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு சதவீதம் 1.57 ஆக குறைந்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி இதுவரை 7.20 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 7.09லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 12 நாளில் இந்தியாவில் புதிதாக 10 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 12 நாளில் 10 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதே சமயம் கடந்த 11 நாளில் 10 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதிதாக பாதிக்கப்படுவோரை காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல, சிகிச்சை பெறுவோர் விகிதத்தை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Chennai , 5,589 more infected in Tamil Nadu Corona on the rise again in Chennai: 1,283 positive in one day
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...