×

ஈராக்கில் தாக்குதல் நடத்திய கேரள ஐஎஸ் தீவிரவாதிக்கு ஆயுள்: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: ேகரள மாநிலம் கண்ணூர் அருகே கனகமலை வனப்பகுதியில் தீவிரவாதிகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக என்ஐஏவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய அதிரடி சோதனையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களான இவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இக்கும்பலில் கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவை சேர்ந்த சுபுஹானி ஹாஜா மைதீன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இவர் கடந்த 2015ல் துருக்கி வழியாக ஈராக் சென்று அங்கு ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தார். ஆயுதப்பயிற்சிக்கு பின்னர் ஈராக் நாட்டு ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தினார். பின்னர் இந்தியா திரும்பினார்.

இவர் மீதான வழக்கு விசாரணை கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு எதிராக போர் செய்த குற்றமும் சுபுஹானி மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் சுபுஹானி ஹாஜா மைதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Tags : Kerala ,attack ,Iraq ,NIA , Kerala IS militant killed in Iraq attack: NIA special court rules
× RELATED காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை