எல்லையில் பாக். ராணுவம் துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர்:  எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை ரஜோரி, குப்வாரா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், சிறிய ரக பீரங்கி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 40 முறை துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>