எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

திருமலை: மறைந்த பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெல்லூரில் பிறந்து தனது பாடல்களால்  உலகளவில் இசை ரசிகர்களை கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 25ம் ேததி மருத்துவமனையில் இறந்தார். தனது தாய் மொழி தெலுங்கு உட்பட தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பத்ம, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இசை உலகில் பல சாதனைகள் படைத்த எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கும் பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>