விவசாயிகளின் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளது: வைகோ

சென்னை: சென்னை கந்தன்சாவடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தலைமை வகித்து பேசியதாவது: நாளைய முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில்  தமிழகம் முழுவதும் 100க்கும் ஏற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகளை பாதுகாக்கவும்,  மத்திய அரசின் சட்டங்களை எதிர்க்கவும், மாநில அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தவும்  ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  ராஜசபாவில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தோற்றுபோவோம்எனநினைத்து வாக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 உறுப்பினர்களை சபை  முடியும் வரை  நீக்கி வைத்தனர். இந்த சட்டத்தால்  விவசாயிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.  பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களை  வாழவைப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது .

Related Stories: