×

குறைதீர் கூட்ட பேனரில் இந்தியில் புதுக்கோட்டை பெயர்

புதுக்கோட்டை: குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இந்தியில் புதுக்கோட்டை என்று எழுதப்பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. வழக்கமாக கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கில் நடைபெறாமல் தொழில்நுட்ப வசதிக்காக அங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தகவல் மைய அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.  மத்திய தகவல் மையத்தின் துறை சார்பாக வைப்பட்டு இருந்த பேனரில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் புதுக்கோட்டை என இருந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையின்படி இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடி வரும் நிலையில் குறைதீர் கூட்டத்தில் இந்தியில் புதுக்கோட்டை என இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய தகவல் மைய அலுவலகத்தில் இதுபோல் மூன்று மொழிகளில் மாவட்டத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. ரயில் நிலையம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கும் நடைமுறைதான் இது’’ என்று தெரிவித்தனர்.

Tags : Pudukottai , Pudukottai name in Hindi in the Kuradithir crowd banner
× RELATED காசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்!