×

ஐபிஎல் 2020: டி20 சூப்பர் ஓவர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

ஷார்ஜா: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 202 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. பின்னர் இரு அணிகளும் சூப்பர் ஓவரில் களமிறங்கின. முன்னதாக இறங்கிய மும்பை அணி 6 பந்துகளில் 1 விக்கெட் இழந்து 7 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 6 பந்துகளுக்கு 13 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Tags : IPL ,Bangalore ,T20 Super Over ,Mumbai , IPL 2020: Bangalore beat Mumbai in T20 Super Over
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...