சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய இடங்களில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் என்ஐஏ விசாரணை நடத்துகிறது. பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளி​லும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும். தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏ-யின் கிளை உள்ளது.

இந்நிலையில் சென்னை, மணிப்பூரில் உள்ள இம்பால், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை, மற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும். பயங்கரவாத செயல்குறித்து தகவல் கிடைத்தால் சரியான நேரத்தில் தகவல்கள் திரட்ட இந்த கிளைகள் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: