ராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரத்தை அடுத்த திருப்பாலைக்குடி அருகே நாகனேந்தல் விலக்கு பகுதியில் உப்பூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை முடிந்து இருச்சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>