கோட்டயம் அருகே வன ஊழியர்களை பிரியாத பருந்து: காட்டில் இருந்து 5 முறை திரும்பி வந்தது

திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே 5 முறை காட்டில் கொண்டு விட்டும், வன அலுவலகத்துக்கு வந்த பருந்து வன ஊழியர்களை பிரிய மனம் இல்லாமல் அங்கேயே தங்கி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலி அருகே பிளாச்சேரியில் துணை ரேஞ்ச் வன அலுவலகம் உள்ளது. இங்கு உயிரின மீட்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வஜூரில் இருந்து ஒரு குடும்பத்தினர், தங்கள் முற்றத்தில் பறக்க முடியாத நிலையில் ஒரு கிருஷ்ண பருந்து வந்துள்ளதாக எருமேலி வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பிளாச்சேரி துணை ரேஞ்ச் அதிகாரி பி.வி.வெஜி தலைமையிலான குழு, வஜூர் சென்று பருந்தை மீட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றது. சிகிச்சைக்கு பிறகு பருந்து நலம் பெற்றது. இதையடுத்து மறுநாள் அந்த பருந்தை போந்தன்பூஜா காட்டுக்கு எடுத்து சென்று விட்டனர். 2 நாட்களுக்குப் பிறகு பருந்து அழுது கொண்டே திரும்பியது. இதனால் ேவறு வழியின்றி வன ஊழியர்கள் பருந்தை, மற்ற பறவைகள் தாக்குவதை தடுக்க ஒரு கூண்டுக்குள் விட்டு பராமரித்தனர். பின்னர் பலமுறை காட்டுக்குள் கொண்டு விட்டனர். ஆனால் பருந்து திரும்பி வந்துவிடுகிறது.

இப்படியாக 5 முறை பருந்து வன அலுவலகத்தை நாடி வந்துள்ளது. இப்போது வன ஊழியர்களை காணவில்லையென்றால், அந்த நண்பர் இடைவிடாது அழுது கொண்டிருக்கிறார். இதையடுத்து வனக்காவலர் அஜேஷிடம் கிருஷ்ண பருந்தை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த பருந்து அஜேஷின் தோள்களிலும், கைகளிலும் வந்திருந்து கொஞ்சி வருகிறது. பருந்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டுவிட முயற்சி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: