கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் லாரி மூலம் எரிவாயு குழாய் பதித்ததால் விளைநிலம் சேதம்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் லாரி மூலம் எரிவாயு குழாய் பதித்ததால் விளைநிலம் சேதமடைந்தது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயு எடுத்து செல்லும் வகையில் கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வேட்டங்குடி கிராமம் வழியே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் சார்பில் லாரி போன்ற வாகனங்களை வயலில் இறக்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது வயல் பகுதியில் ரசாயனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சம்பா நெற்பயிர் விதைப்பு செய்திருந்த வயல் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். வயலை சேதப்படுத்தியதை கணக்கில் கொண்டு அதற்குரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: