எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

அமராவதி: பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 51 நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பெரும்பாலான மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் நேற்று முன்தினம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பிபி-க்கு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திராவில் பிறந்து மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர் எஸ்பிபி. 50 ஆண்டுகள் இசைத்துறைக்கு சேவையாற்றிய எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். 50 ஆண்டுகளாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்பிபி பாடியுள்ளார் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: