தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை: வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில பகுதியிலிருந்து இன்று முதல் விலக தொடங்கியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சூழ்ச்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கும் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. அந்த அடிப்படியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, நாகை, கமுதி, நாமநாதபுரம், திருமங்கலம், கப்பலூர் ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு குளிச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, மேற்கு மாம்பழம், தியாகராயர் நகர், துரைக்காப்பம் பெருங்குடி, திருவான்மியூர், ஆழ்வார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக்பில்லர், பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி., அரும்பாக்கம், அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாகை

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் காரைக்காலில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாமநாதபுரம்

நாமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

திருமங்கலம்

திருமங்கலம், கப்பலூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.

திருப்புவனம்

இதனிடையே நேற்று இரவு முழுவதும் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை. குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று முழுவதும் தண்ணீரை வெளியேற்றி குழிகளை காயவைக்கும் பணி நடைபெறும். இன்று இரவு மழை பெய்தால் நாளையும் பணிகள் நடைபெறுவது சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது.

Related Stories: