என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா: பிரதமர் மோடி எனது ஆட்சியை பாராட்டியுள்ளார்: செயற்குழுவில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் வாக்குவாதம்.!!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க  செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தினர். இதனையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 11  பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின்  முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினர்.

ஆனால் வழிகாட்டுதல் குழுவை தற்போது அமைக்க இயலாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியதால் தொடர்ந்து விவாதம் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், காலை 10 மணி தொடங்கிய செயற்குழு கூட்டம் 5  மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்துள்ளது. கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓ.பி.எஸ். -ஈ.பி.எஸ். கூட்டாக வரும் அக்டோபர்  7-ம் தேி அறிவிப்பார்கள் என்றார். இந்நிலையில், செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஓ.பி.எஸ். -ஈ.பி.எஸ். இடையே நடைபெற்ற வாக்குவாதம் வெளியாகியுள்ளது.

ஓ.பி.எஸ்: தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வர் ஆக்கியது முறைந்த முதல்வர் ஜெயலலிதா; ஆனால் உங்களை (ஈ.பி.எஸ்) முதல்வர் ஆக்கியது சசிகலா என்று வாக்குவாதம்.

ஈ.பி.எஸ் பதில்: இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான்.

ஈ.பி.எஸ்: கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். முதல்வராக நான் சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமர் மோடியை எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார் என்று வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்  தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: