×

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் விவகாரத்தில் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசு நிராகரிப்பு :ராமதாஸ் அறிக்கை

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: இந்தியா - இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும்  கடந்த 26ம் தேதி இணையவழியில் பேச்சு நடத்தினார்கள். அப்போது, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்கு பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்யவேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கு தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என ராஜபக்சே மோடியிடம் உறுதி அளித்தார்.பிரதமருடனான பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவிர்த்திருப்பதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : government ,Sri Lankan ,India ,Ramadas ,Eelam Tamils , Eelam Tamils, Government of Sri Lanka, Rejection, Ramadas, Report
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை