ஜப்பான் நடிகை தூக்கிட்டு தற்கொலை :ரசிகர்கள் சோகம்

டோக்கியோ,:ஜப்பான் நடிகை யூகோ டக்யூச்சி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானிய திரைப்பட நடிகை யூகோ டக்யூச்சி (40), தலைநகர் டோக்கியாவின் ஷிபூயா வார்டில் உள்ள தனது வீட்டு அறையில் நேற்று தூக்கிட்டு தற்ெகாலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக அவரது கணவர் டைக்கி நகாபயாஷியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஜப்பானின் பிரபலமான நடிகையான இவர், ரிங், மிஸ் ஷெர்லாக், பி வித் யூ, ஸ்ட்ராபெர்ரி நைட், பிரைட், க்ரீப்பி, மிட் நைட் ஈகிள் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்தவர்.

மேலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜப்பானில் வெளியான திகில் படமான ரிங்குவில் அறிமுகமானார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள், ஜப்பானிய அகாடமி விருதுகளை பல்வேறு படங்களில் நடித்ததற்காக பெற்றார். இவரது மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. யூகோ டக்யூச்சி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>