4வது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகனை கொன்ற தாய் கைது: பீகாரில் பயங்கரம்

பாட்னா : பீகாரில் 4வது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலம் பாட்னா அடுத்த ஹசன்பூர் காண்டா பகுதியை சேர்ந்தவர் தர்மஷீலா தேவி (23). இவரது கணவர் அருண் சவுத்ரி (28). இவர்களுக்கு சாஜன் குமார் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. ஆனால், அந்த குழந்தையால் வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற குழந்தையாக இருந்தது. திருமணமான ஒரு வருடத்தில், தர்மஷீலா தேவி கணவனை விட்டுவிட்டு பிரிந்து தனது மகனுடன் வேெறாரு ஊரில் வசித்து வந்தார். சில மாதங்களுக்குள் பின், இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த 2வது  கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

தொடர்ந்து அடுத்த சில மாதங்கள் கழித்து முஸ்தபாபூரில் வசிக்கும் மகேஷ் சவுத்ரியை என்பவரை மூன்றாவது முறையாக திருமணம்  செய்து கொண்டார். அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில்  இறந்தார். இதனால், தரம்ஷீலா தேவி மீண்டும் திருமணம் செய்து கொள்ள  விரும்பினார். ஆனால் அவரது 4 வயது மகன் அவருக்கு ஒரு சுமையாக இருந்ததை உணர்ந்தாள். தனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருக்கும் என்பதால், நேற்று முன்தினம் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். தாயின் கொடூர செயலால் சிறுவன் சாஜன் குமார் பலியானார்.

கிராமத்தில் உள்ள சிலர், சிறுவன் திடீரென மாயமானது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில், தர்மஷீலா தேதி தனது 4வது திருமணத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>