தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலியின் மகளை சீரழித்த காமக்கொடூரன்: அவமானத்தில் சிறுமி தற்கொலை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே சேங்கதோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(32). திருமணமாகாதவர். ேசாப்பு கம்பெனி ஏஜென்சியில் கடைகளுக்கு சோப்பு சப்ளை செய்யும் வியாபாரியாக உள்ளார். இவருக்கு கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலே அவரது கணவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.மகள் மற்றும் தனது தந்தையுடன் அந்த பெண் தனியாக வசித்து வந்தார். அப்போது அவரது வீட்டு வழியே சென்றுவந்த சோப்பு வியாபாரி கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்த நிலையில், அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர்.

இதனால் கணேசன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி பகல், இரவு நேரங்களில் சென்றுவந்தார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கணேசனுக்கு அந்த பெண்ணின் 11 வயது மகள் மீதும் மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நேரத்திலும் கணேசன் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.இந்நிலையில், சம்பவத்தன்று கள்ளக்காதலி, அவரது தந்தை ெவளியில் சென்றதை தெரிந்துகொண்ட கணேசன் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சுகொடுத்துள்ளார். பின்னர் தான் வாங்கி வந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளார். இதை வாங்கி குடித்த சிறுமி சிறிது நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். அப்போது காமகொடூரன் கணேசன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தூக்கம் கலைந்து கண்விழித்த சிறுமி தனது அலங்கோல நிலையை பார்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி சிறுமியின் தாத்தா அளித்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர்.

Related Stories:

>