தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.!!!

சென்னை: உளவுத்துறை எச்சரிக்கையைடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.  இருப்பினும், கட்சியின் உட்சி பிரச்சனை காரணமாக அவர் பதவி விலகினார். தொடர்ந்து, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இதற்கிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு, சிஐடி பிரிவு  மற்றும் சென்னை காவல்துறை ஆகியவற்றின் மூலம் வீடு, அலுவலகம் மற்றும் கான்வாய்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரம் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமையை அடிப்படையாக வைத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சுறுத்தலை தடுக்கும்  விதமாக தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு அடிப்படைவாத அமைப்பு மற்றும் மற்றும் சமூக விரோத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. இதன்அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக முதல்வர் பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, தீவிரவாத கும்பல்களால் இந்து முன்னணி தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவல் அடிப்படையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட  காவல்துறை உயர் அதிகாரிகளையும் உஷார்படுத்தி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் தீவிரவாத அமைப்புகளால் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>