×

தூர்வாரிய குளத்தில் மீண்டும் குப்பை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காப்பிலியபட்டி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சடையன்குளம் உள்ளது. இதில் கிடைக்கும் நீரை கொண்டு தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, சிந்தலப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேரின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த குளத்தை தூர்வாரும் பணியை அரசின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.36.70 லட்சம் செலவில் கலெக்டர் விஜயலட்சுமி கடந்தாண்டு துவக்கி வைத்தார். இதில் அரசியல் தலையிடு, முறைகேடு நடைபெறுவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்பேரில் அந்த திட்டம் கலெக்டரால் ரத்து செய்யப்பட்டு, தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறைந்த நிதியில் குளம் தூர்வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது இந்த சடையன்குளத்தில் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த குப்பைகளை தினமும் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக இதன் அருகில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து 25 கிராம மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது சுமார் 100 லோடு குப்பைகளை குளத்தில் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர். எனவே கலெக்டர் நீர்நிலைகளில் குப்பை கொட்டி அசுத்தப்படுத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குளத்தை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond , pool, Trash, again
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...