மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் 'மெல்ல கொள்ளும் விஷம்'என காங்., விமர்சனம்'!!!

டெல்லி:  வேளாண் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்றைய தினம் காங்கிரஸ் மனுதாக்கல் செய்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஆளும் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருப்பது கடும் ஏமாற்றம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் மசோதாக்களை ராம்நாத் கோவிந்த் திருப்பி அனுப்பி விடுவார் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருந்ததாக குறிப்பிட்ட சுக்பீர் சிங் பாதல் இது தேசத்தின் இருண்ட நாள் என்று விமர்சனம் செய்துள்ளார். இதனிடையே மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் மெல்லக் கொள்ளும் விஷம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்றும், அவர்களை பெரு நிறுவனங்களுக்கு அடிமையாக்கிவிடும் என்றும் அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர். இதனால் வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள காங்கிரஸ் எம்.பி., டி.என். பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யவிருக்கிறார்.

Related Stories:

>