செங்கல்பட்டில் நடைப்பயிற்சிக்கு சென்ற காவலர் வெட்டிக்கொலை : தொடரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்!!!

செங்கல்பட்டு:  செங்கல்பட்டில் நடைப்பயிற்சிக்கு சென்ற காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் நடந்து வரும் தொடர் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறியுள்ளன. அதாவது கூடுவாஞ்சேரி, மறைமலர் நகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் முன்விரோதம் காரணமாக கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2012ம் ஆண்டு விஜி என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய சேகர் என்பவர் நேற்று மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் 5 பேர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் சரணடைந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜியின் தம்பி தலைமையில் நாங்கள் கொலை செய்தோம் என கூறியுள்ளனர். இதையடுத்து இதுதொடர்பாக ரவுடி விஜியின் தம்பியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னை புழல் சிறைச்சாலையில் சிறை காவலராக பணியாற்றி வந்த இன்பரசு என்பவர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் ஏதும் வெளிவரவில்லை. இதனால் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா? அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தொடர் கொலையால் செங்கல்பட்டு மாவட்ட மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

Related Stories:

>