×

அரசு அதிகாரிகள் மட்டும் மேலே செல்ல அனுமதியா? ஹைவேவிஸ் வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் முற்றுகை

சின்னமனூர்: ஹைவேவிஸ், மேகமலைக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, மகாராஜன் மெட்டு, வெண்ணியார், இரவங்கலாறு உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்களை கொண்ட ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த 5 மாதங்களாக மலைச்சாலை அடைக்கப்பட்டு உள்ளூர்வாசிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த செப்.1 முதல் மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஹைவேவிஸ் மலை பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே நேற்று ஹைவேவிசுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அடிவாரத்தில் நின்ற வனத்துறையினர் அவர்களை அனுமதிக்க மறுத்தனர். அப்போது, அரசு அதிகாரிகளை மட்டும் மட்டும் அனுமதிக்கிறீர்கள். எங்களை அனுமதிக்க மறுப்பது ஏன் என அவர்களிடம் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேகமலை, ஹைவேவிஸ் பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்தனர். குரங்குகளுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் உணவு போடக் கூடாது, இடையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது, 6 மணிக்குள் திரும்ப வேண்டும் என கட்டுப்பாடு விதித்து அனுப்பினர்.

Tags : government officials ,Highways Forests ,Tourist siege , Chinnamanur, Forest Department
× RELATED அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது...