×

பறவை போல பறந்து சிக்ஸரை தடுத்து கிரிக்கெட் உலகை மிரளவைத்த நிகோலஸ் பூரானின் அட்டகாசமான பீல்டிங் : சச்சின்,சேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்கள் வாழ்த்து!!

ஷார்ஜா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரனின் SAVE ஜாம்பவான்களால் பாராட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங்கை காட்டிலும் பந்தை தடுப்பதில் காட்டும் ஆக்ரோஷம் எப்போதும் பேசப்படும். அந்த வித்தையில் பலர் ஜொலித்தாலும் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜான்டிரோட்ஸ்-ஐ அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.பல்லூனை போல பறந்து பந்தை தடுப்பதில் அவருக்கு இணை அவர் மட்டுமே. அதனாலேயே ஈன்றளவும் ஃபீல்டிங் மன்னனாக அவர் பலராலும் போற்றப்பட்டு வருகிறார்.

ஜான்டிரோட்ஸின் ஆச்சரியப்பட வைக்கும் ஃபீலடிங்கையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளார் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஆகும்க ட்ரினிடாடைச் சேர்ந்த 24 வயது வீரர் நிகோலஸ் பூரன். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் 24 வயது நிக்கோலஸ் பூரன், அவர்களின் SAVE உலகின் தலைசிறந்த பீல்டிங்காக உருவெடுத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன், பஞ்சாப் வீரர் முருகன் அஸ்வின் வீசிய 8வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸர் பறக்கவிட முயற்சித்தார்,

ஆனால் பவுண்டரி லைனில் நின்றிருந்த பஞ்சாப் வீரர் நிக்கோலஸ் பூரன் பவுண்டரி முழுவதுமாக லைனை தாண்டி அந்த பந்தை ஒற்றை கையில் கேட்ச் பிடித்து சிக்ஸரை தடுத்து நிறுத்தினார். நிக்கோலஸ் பூரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாக பரவி வரும் நிலையில், இது போன்ற ஒரு பீல்டிங்கை தாங்கள் இதுவரை பார்த்ததே கிடையாது என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Tags : Nicholas Pooran ,world ,Sehwag ,Sachin , Bird, Sixer, Cricket, Nicholas Puran, Fielding
× RELATED ராஜஸ்தானை வீழ்த்தி பட்டியலில்...