கோவிட் 19 தொற்றுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை அடைவதில் இந்தியா வெகு தொலைவில் உள்ளது : மத்திய அரசு விளக்கம்!!

டெல்லி : கோவிட் 19 தொற்றுக்கு எதிராக ஹெர்ட் இம்மியூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை அடைவதில் இந்தியா வெகு தொலைவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று நோய் பரவும் போது, அதில் இருந்து மக்கள் நிவாரணம் பெறுவதற்கு மந்தை எதிர்ப்பு சக்தி உருவாக்கலாம் என்கிறார்கள் சர்வதேச மருத்துவ நிபுணர்கள். இதற்கான 2 வழிகளில் ஒன்று, தடுப்பு மருந்தை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம்.மற்றொன்று தொற்றை பரவவிட்டு அதன் மூலம் மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.

இந்த நிலையில் டெல்லியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பெருந்தொற்று பரவல் தொடர்பான 2வது தேசிய புள்ளி விவரங்களில் மந்தை எதிர்ப்பு சக்தி அடைவதில் இருந்து இந்தியா வெகு தொலைவில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்டார். இது நாம் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பொருத்தமான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

Related Stories:

>