பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரங்கங்கள் மீது பிரிவினைவாதிகள் ராக்கெட் தாக்குதல்!!.. ஈராக் தூதரகத்தில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு!!!

வாஷின்டன்:  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தமது நாட்டு தூதரகத்தை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் நாட்டு இராணுவ தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் பழிக்குப்பழி வாங்குவதற்காக அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில் பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராக்கெட் அமெரிக்க தூதரத்திற்கு அருகே உள்ள காலியான வீட்டில் விழுந்து வெடித்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அமெரிக்க தூதரகம் எந்நேரமும் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தூதரகத்திலிருந்து முழுமையாக வெளியேற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>