×

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் டிராக்டரை கொளுத்தி விவசாயிகள் போராட்டம் : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்

டெல்லி:  மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் டிராக்டரை தீயிட்டு கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மழைகால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இந்தியா கேட் அருகே காலையில் கூடிய விவசாயிகள் டிராக்டரை சாலையில் கவிழ்த்து தீயிட்டு கொளுத்தினர்.

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்திய விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த டெல்லி காவல் துறையினர் தீயை அனைத்து டிராக்டரை அங்கிருந்து அகற்றினர். இதனால் இந்தியா கேட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

Tags : Delhi ,India Gate , Al Qaeda, Arrest, National Intelligence, Organization, Action...
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு