தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் UPSC பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: UPSC முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் UPSC பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி நடக்கும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் வடமாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

மேலும் மனுதாரர்கள் தரப்பில் நாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிவில் சர்வீசஸ் 2020 தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பான மனு குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சியிடம் பதில் கோரியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வை மேலும் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மனுதாரர்கள், இதனால் இடைவிடாமல் பெய்யும் மழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளத்தின் பாதிப்பும் குறையும், கொரோனாவின் தாக்கமும் குறையும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, மனுதாரர் வாதத்துக்கு மறுப்பு தெரிவித்து வாதாடிய UPSC  ஏற்கனவே செப்டம்பர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு, அக்.4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுகளை மீண்டும் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று UPSC தரப்பில் வாதாடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக UPSC பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>