×

இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு கொரோனா; 95,542 பேர் பலி... கடந்த 11 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேர் குணமடைந்ததால், எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 95 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 82,170 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,74,703 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,039 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில்  74,893 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 50,16,521 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,62,640 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 82.58% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.57% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 15.85% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 7,09,394 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 7,19,67,230 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
    
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :273646; குணமடைந்தோர் : 1030015; இறப்பு :  35571

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46341; குணமடைந்தோர் :  525154 ; இறப்பு :  9313
    
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 29228 ; குணமடைந்தோர் :  236651 ; இறப்பு :  5235

கேரளா : சிகிச்சை பெறுவோர் :56786 ; குணமடைந்தோர் :  117921 ; இறப்பு :   677

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 104743; குணமடைந்தோர் :462241 ; இறப்பு :  8582
    
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :64876 குணமடைந்தோர் : 605090 ; இறப்பு :   5708

Tags : Corona ,India , Vehicle, License, Cancellation, States, Order...
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...