×

நாட்டிலேயே முதல்முறையாக சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்டிராவில் தடை

மும்பை : நாட்டிலேயே முதல்முறையாக சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து அம்மாநில அரசு அதிரடியான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநில அரசும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் மராட்டிய மாநில பொது சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 7 (விளம்பரம் மற்றும் வர்த்தக மற்றும் வர்த்தக உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துதல்) சட்டம், 2003, ஒற்றை சிகரெட் மற்றும் பீடிகளை விற்பனை செய்வதற்கு அரசு முழு தடை விதிக்கிறது. இந்த உத்தரவை சுகாதார முதன்மை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் பிறப்பித்துள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அங்கு சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக மட்டுமே வாங்க முடியும். ஒரு சிகரெட், இரண்டு சிகரெட் என இனி யாரும் வாங்க முடியாது.சில்லறையில் சிகரெட்டுகள் மற்றும் பீடிஸ் விற்பனையை தடை செய்த நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாறி உள்ளது.

Tags : Maharashtra ,country ,time , Andhra, Karnataka, robbery, gang, arrest...
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...