உலகளவில் 3.33 கோடி பேருக்கு கொரோனா... 2.46 கோடி பேர் நோயில் இருந்து மீண்டனர்... வைரசால் பலி எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சமாக அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,33,03,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76,66,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65,114 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2,46,34,061 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 73,20,669, உயிரிழப்பு - 2,09,453, குணமடைந்தோர் - 45,60,038

இந்தியா       -    பாதிப்பு - 60,73,348, உயிரிழப்பு -   95,574, குணமடைந்தோர் - 50,13,367

பிரேசில்       -    பாதிப்பு - 47,32,309, உயிரிழப்பு - 1,41,776, குணமடைந்தோர் -  40,60,088

ரஷியா        -    பாதிப்பு - 11,51,438, உயிரிழப்பு -   20,324, குணமடைந்தோர்  - 9,43,218

கொலம்பியா  -     பாதிப்பு -  8,13,056, உயிரிழப்பு -   25,488, குணமடைந்தோர்  - 7,11,472

Related Stories: